முள்ளிவாய்க்கால் தானா முடிவாகிப்போகும் போடா!

முள்ளிவாய்க்கால் தானா முடிவாகிப்போகும் போடா!

எத்தனைமுறைதான் கடல்கொண்டது?

எத்தனைமுறைதான் இடர் தந்தது?

அத்தனைமுறையும் தமிழ்வென்றது

     அடடா வா தமிழா!

அத்தனைமுறையும் தமிழ்வென்றது 

     அடடா வா தமிழா!

 

       

 

எழுஎழு விரைவினில்

தரணியில் தமிழதன்

இழிநிலை துடைத்திடுவோம் வா!

   தமிழா ! தமிழா! தமிழா ! தமிழா!

        

        

 

புயலொடு பொருதிடு ; பகைவரின் படையதில்

           முடிவுரை எழுதிடு வாடா!

முள்ளிவாய்க்கால் தானா முடிவாகிப்போகும் போடா!

 

 

        

   உறவுகள் அங்கே ஆயிரம்

மாண்டனர் அன்றோ ஆயினும் _ நம்

உறவுகள் அங்கே ஆயிரம்

மாண்டனர் அன்றோ ஆயினும் - நீ

மீண்டும் எழுந்தொரு

தீயிலிறங்கிடு !

நம்பிக்கை ஒன்றே ஆயுதம்!

மீண்டும் எழுந்தொரு

தீயிலிறங்கிடு !

நம்பிக்கை ஒன்றே ஆயுதம்!

மீண்டும் எழுந்தொரு

தீயிலிறங்கிடு !

நம்பிக்கை ஒன்றே ஆயுதம்!

 

தமிழா தமிழா! தமிழா தமிழா!  

முள்ளிவாய்க்கால் தானா முடிவாகிப்போகும் போடா!

முள்ளிவாய்க்கால் தானா முடிவாகிப்போகும் போடா!

 

 

 

             

அன்னைமண்ணின் மடிதொட்டவன்!

அங்குநின்றபடி   சுட்டவன்! _ நம்

அன்னைமண்ணின் மடிதொட்டவன்!நமை

அங்குநின்றபடி   சுட்டவன்!

ஆறடி மண்ணும் சொந்தமின்றி இனி

அழிந்துபோகத்தக்கவன்! _ ஒரு

ஆறடி மண்ணும் சொந்தமின்றி இனி

அழிந்துபோகத்தக்கவன்!

ஆறடி மண்ணும் சொந்தமின்றி இனி

அழிந்துபோகத்தக்கவன்!

      ஆக்கம் : சிவம் அமுதசிவம்

 

பி.கு. : இது ‘ தாய்பிறந்த மண் ‘ எனும் இசைக்குறுவட்டில் இடம்பெற்றுள்ள பாடல்.