ஓடி மறைந்தது ஓராண்டு காலம்.
ஓடி மறைந்தது ஓராண்டு காலம்.
உலகமே சேர்ந்து உண்மையை மறுத்து
மூடி மறைத்தஅம் முள்ளியின் அவலம்.
தேடி அலைகிறோம் இன்று வரை -நம்
தேசமே அந்தத் தீயவர் கையில்.
ஓடினோம்! ஓடினோம்! - உலுத்தரின் அதர்மக்
குண்டுகள் மழையென வீழ்ந்ததே எங்கும்!
பச்சிளம் பாலகர் பரிதவித் தழிய....
பாதைகள் எல்லாம் பிணமலை குவிய!
பார்க்கும் இடங்களில் எங்கணும் ஓலம்!
இத்தனை இடர்கள் தந்தவன் இன்று
கொக்க ரிக்கிறான் மமதையில் நின்று!
முள்ளி வாய்க் காலில் முடிந்ததாம் எங்கள்
மூச்சுகள், உணர்வுகள் முழுவதும் என்று!
ஒற்றைக்கு ஒற்றை – நேருக்கு நேரே
நின்று பொருதுதல் அதுதான் வீரம்.
இருபது நாடுகள் துணையுடன் வென்றோம்
வீராப்பு வசனம்... ; இஃதொரு வீரம்..!?..
இத்தாலிப் பேயின் இடையினில் சுற்றிய
சேலையின் மறைவில் சிங்களப்பேய்கள்! (இயல்பான நட்பு!)
நல்ல பொருத்தம் ; மூனா மானா – (முசோலினி –மகிந்தா)
அன்றுடன் முடிந்து போனதா அவலம்?
இன்றுவரை இது தொடர்கதை தானே!
எங்கள் வீட்டினுள் இரவென்ன பகலென்ன
சிங்கள இராணுவம் வருகுது சும்மா!
எடுபிடி கூட்டம் எங்களைச் சுடுகுது!
எத்தனை யெத்தனை கொடுமைகள்._ அம்மா!
போர்ப்பறை கேட்குது நீகொடு விடை;
புறமுது கிடும் எதிரிகள் படை!
எங்கள் தலைவன் பிரபா கரன்.
என்றும் தமிழுல கின்சூ ரியன்.
அவன்வழி செல்வோம் – அவன்வழி செல்வோம்
அலையலை யாய்ப்போய்ப் பகைவரை வெல்வோம்!
ஐநா சபையதன் முன்னே கருகிய
அழகிய இளைஞன் அவனொரு தமிழன்!
தமிழகம் எங்கும் தற்கொடை யாகித்
தணலினில் வெந்தனர் தமிழர்கள் அங்கே!
இன்னமும் இங்கே என்னுயிர்த் தோழா!
வாளா விருப்பது முறையோ? முறையோ?
செத்து மடிவது ஒருமுறை தானே ?
சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா!
காசியின் கவிதை கைகளில் ஏந்தி
புதுவையின் வீச்சில் புத்துணர் வூறிக்
கோஓடை யிடியெனக் கொதித்தெழு வோமே!
கொடும்பகை வெல்வோம்! கொடும்பகை வெல்வோம்!
வன்னியில் அங்கே எங்கள் உறவுகள்
அத்தனை பேரையும் மந்தைகள் போலே
ஓட்டிச் சென்று பட்டியில் அடைத்து
படுகொலை செய்யும் பாதகர் கூட்டம்
பிணத்தைப் புணரும் பித்தர் கூட்டம்
புறப்படு தமிழா! புறப்படு! புறப்படு!
எங்கள் மண்ணில் நடந்தவை எல்லாம்
இன்றும் நினைத்தால் இதயம் வெடிக்கும்!
பலநாள் கிடந்தோம் பட்டினி யாக!
ஒருநாள் கூட நிம்மதி யில்லை!
எப்போ தொருமுறை கப்பலும் வரும்!
கொத்தணிக் குண்டுகள் நித்தமும் வரும்!
செத்ததுவிழும் ! மற்றது களும்
சிறிசுகள் பெரிசுகள் எல்லாம் அழும்!
சிதறுது சனம்! பதறுது மனம்!
பதறுது மனம்! பதறுது மனம்!
சோறு மட்டுமே சுதந்திரம் இல்லை!
மானம் ஒன்றுதான் வாழ்வதன் எல்லை!
புறப்படு தமிழா! புறப்படு புறப்படு!
தாயகம் காப்போம்! தாயகம் காப்போம்!
தரணியில் காண்போம் தனித்தமிழ் ஈழம்!!
தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்!!!!!
ஆக்கம் : சிவம் அமுதசிவம்