கவனம் தமிழா! கவனம்!
வைகாசித்திங்கள்( ஆங்.) 18ம் நாள்.
முள்ளிவாய்க்கால் படுகொலை என்று அறியப்பட்டதினம் இது!
அறிந்தும் அறியாததுபோல் - தெரிந்தும் தெரியாததுபோல்
உலகமே கண்ணைமூடிக் கொண்டிருக்க,
இந்தியக்கோட்டான்களும் சிங்களக்குரங்குகளும் சேர்ந்து
ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்களை உயிரோடு புதைத்ததினம் இது!!
தமிழுறவுகளைத்தொலைத்தமையை எண்ணி,
முழுத்தமிழினமுமே கலங்கிநிற்கும் நாள் இது!
மனிதத்தைத்தொலைத்தமைக்காக முழு உலகமுமே
வெட்கித்தலைகுனியவேண்டிய நாள் இது!
தமிழனாகப்பிறந்த ஒவ்வொருவனும்
தலையிலடித்துக்கதறியழ வேண்டிய நாள் இது!!
அழுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் ,அன்னைதமிழ் துயர்போக்கும்
அடுத்தகட்ட நகர்வுக்காக வீறுகொண்டெழவேண்டியநாள் இது !!!
இந்தநாளைக்கூட ‘ இனிய நாள்’ என்று சொல்ல, சில சுயநலப்பேய்கள் - எமக்கு அறிவுரை சொல்லும் போர்வையில், எமது விருந்தினர் அறையினுள்ளேயே , எமது
தொலைக்காட்சிப்பெட்டியினூடே நுழையக்கூடும் !!!
எமதுறவுகள் பட்ட அவலங்களில் குளிர்காயமுனையும்
இக்கருங்காலிகள் குறித்து, கவனமாக இருப்போம் !
எமது கையையே எடுத்து, எமது கண்ணைக்குத்தவரும்
எத்தர்களிடம் எச்சரிக்கையாயிருப்போம் !!
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களினதும்,
அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தில்
மாண்டுபோன மக்களினதும்
மரணங்களை அர்த்தமுள்ளதாக்குவோம்!!!!!
தாயக விடுதலையை நோக்கி முன்னேறுவோம் !!! - ஏனெனில்..........
நாம் தமிழர் !!!!!!!!!!
வாழ்க தமிழ் !!!!!